j பேபி . (விமர்சனம்.) தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் !

பெரிய நட்சத்திரங்களை  தேடி கண் பூத்துப் போனதுதான் பலன்.

ஒத்த ஊர்வசியைத் தவிர ஜெ . பேபி படத்தில் தெரியப்பட்ட நடிகர்கள் யார் என்றால் ‘அட்டக்கத்தி ‘ தினேஷ், எடுப்பார் கைப்பிள்ளையாக பயன்படுகிற  காமடி நடிகர் மாறன். இவர்கள் இருவரும் திறமையான  நடிகர்கள் என்றாலும்   ரேங்க் வரிசைக்கு வந்ததில்லை .

ஆனால் ,

கதையின் உயிர் நரம்புகளாக இந்தப்படத்தில் அந்த நல்லவர்கள்.! எவ்வித படபடப்பும் இல்லாமல் அமைதியாக கதை ஆரம்பமாகிறது.  அம்மாவுக்கு  ,கணவன் இல்லை.. 3 ஆண் பிள்ளைகள். இரண்டு மகள் . இவர்களும் வாழ்க்கைத் துணையைத் தொலைத்தவர்கள்தான்.  .  அண்ணன் மாறனும் தம்பி தினேசும் எலியும் பூனையுமாக முட்டிக் கொள்கிறவர்கள்  பேசிக்கொள்வதில்லை। தொலைந்து போன அம்மா கல்கத்தாவில் இருக்கிறாள் என்பது தெரிந்து . வடமாநில ரயில் பயணம்,. வாய்க்கு வசப்படாத சாப்பாடு. , அலைக்கழிப்பு, உடன்பிறப்புகளிடையில் முரண் . அம்மையைத் தேடிசெல்கிறவர்கள் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்கள். இத்தகைய பயணத்தில் மாறன் விடுகிற  ஒன் லைன் தான்  சிரிக்க  வைக்கிறது. இப்படியாக தேடுதல் நடக்கிற முன் பாதியில் ஊர்வசி  தான் இருப்பதை   பதிவு செய்து கொள்கிறார்.

இரண்டாம் பாதிதான் கதையின் போக்கை மாற்றியதுடன் ஊர்வசிக்கு ரெட் கார் பெட் விரிக்கிறது.

ஊர்வசிக்கு முதுமை ,தாளாமை . அவ்வப்போது வந்து தொலைகிற சிறுபிள்ளைத்தனம். திறந்து கிடக்கிற வீடுகளை பூட்டிவிடுவார். பக்கத்து வீட்டு போஸ்ட் பாக்ஸில் இருக்கிற லெட்டர்ஸை தூக்கிக் கொண்டு வந்து விடுவார் , வீட்டில் கண்ணுக்கு தெரிந்து இருக்கிற தங்கப்பொருட்களை  யாருக்காவது தானம் பண்ணிவிடுவார். இப்படியும் ஒரு குணம்.  மன  கோளாறு . கோபம் வரும். நீதிபதியையே மிரட்டுகிறாரே.! அழவும் செய்வார். தன்னை மிரட்டுகிறவர்களை  “. நான் யாரு தெரியுமா? இந்திரா காந்தி ஃபிரண்டு, ஜெயலலிதா ஃபிரண்டு , சி எம்.ஸ்டாலின் தெரியும் ” என்று பீதியை கிளப்புவார் . நைனா உன்னை நானா  அடிச்சேன், நீ தானே அடிச்சே?”என அப்பாவியாக மகனிடம்  அசடாவார் ! “,நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல,நைனா என்னால உங்களுக்கு எவ்வளவு பிரச்னை எனப் புலம்பும் போது நமக்கு ஊன் உருகிப்போகும்  ஊர்வசிக்கே உரிய தனிச்சிறப்பு.நடிப்பின் உச்சம் . இவரை விஞ்சும் நடிகைகள் இருப்பார்களா?

மாறனுக்கு மாறுபட்ட வேடம்,  அந்த வேடத்தை நிறைவாகச் செய்து கிளாப்ஸ் அள்ளுகிறார்.

 தினேஷ், சற்று பாடியாக தெரிகிறார். அவரது பாணி தொடர்கிறது.

நடிகைகள்  மெலடி டார்கஸ், தாட்சாயிணி  இஸ்மத் பானு, சபீதா ராய் ஆகிய எல்லோரும் கேரக்டர்களாக மாறியது சிறப்பு.  நடித்திருக்கிறார்கள்.வட்டிக்கடைக்காரராக சிறுவேடத்தில் வந்தாலும் வரவேற்புப் பெறுகிறார் வம்புக்காரர் கவிதாபாரதி.

இந்தப்படம்  ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. அம்மாவை குடும்பத்துடன் சேர்த்த இராணுவவீரர் சேகர் நாராயணன், திரையிலும் அதைத் திரும்பச் செய்திருக்கிறார்.

டோனிபிரிட்டோ இசை கபிலனின் வரிகளில் சித்ரா பாடியிருக்கும் யார் பாடலை என்கிற பாடல் திரும்பத் திரும்பக் கேட்கவைக்கிறது.

ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு மேற்குவங்கஅசலை பதிவு செய்திருக்கிறது நம்மவூர் வடசென்னை டைப்.

  திரைமொழியில் எழுதி பார்ப்போரை நெகிழ வைத்திருக்கிற இயக்குநர் சுரேஷ்மாரிக்கு பெஸ்ட் டைரக்டர்,   ஊர்வசிக்கு, ஊர்வசி விருது கொடுங்கய்யா !  ஒன்றிய அரசுக்கு தமிழர்களின் ஆசை. ஆனா நீங்க செய்ய மாட்டீங்க. ஸ்டாலின் சார் நீங்க கொடுங்கய்யா !!!.

—–தேவி மணி