சூர்யாவுக்கு சவால் விடும் ஜோதிகா!

நடிகை ஜோதிகா, கணவர் சூர்யா போன்றே தனது பிட்னஸ் குறித்தும் அதிக அக்கறை காட்டி வருகிறார் ஆண்களுக்கு நிகராக ‘ஜிம்’மில் அவர் கடினமான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.சமீபத்தில் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் தலைகீழாக படிக்கட்டுகளில் இறங்குவது மற்றும் தலைகீழாக நின்றபடி பந்து விளையாடுவது என ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்கள் இடம் பெற்று இருந்தது.சமீபத்தில் இவர், தானும் தனது கணவரும் உடற்பயிற்சியில் போட்டி போடுவதாக தெரிவித்திருந்தார்.

தினமும் 2 மணி நேரம் கடுமையாக உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதாகவும் தெரிவித்து இருந்தார்..இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஜோதிகா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் சூர்யாவும், ஜோதிகாவும் ஜோடியாக இணைந்து போட்டி போட்டுக் கொண்டு, ஒருவருக்கொருவர் சவால் விடும் வகையில், ‘ஜிம்’மில் ஒர்க் அவுட் செய்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)