அரசியல்வாதிகள் இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது! -விஷால் மிரட்டல் !!

நடிகர் விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்,வரும் ஏப்ரல் 26 ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இந்த திரைப்படத்தின் புரோமோஷன் விழா திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ந டைபெற்றது . நடிகர்விஷால், இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர்.
பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
“ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்டமொழிகளிலும் வெளியாகவுள்ளது.‘சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன் மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள்.
அதனை எதிர்த்துத் தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன்பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள். சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்க வில்லை என்றால், மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படு த் தி க் கொள்ள வாய்ப்புள்ளது.
விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம்.அரசியல் என்பது பொழுதுப்போக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் .‘வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான்.
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன்.பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவுஎன பணம் கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது.”என்று நடிகர் விஷால் கூறினார்.