அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’.!
‘ஆன்டி இண்டியன்’ படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள புதிய படம் ‘உயிர் தமிழுக்கு’. இப்படத்தின் மூலம் ஆதம்பாவா இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார்.
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் இசையமைப்பாளராக மறுபிரவேசம் செய்துள்ளார் வித்யாசாகர். வரும் மே-10ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது, “ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது,
இந்த வரவேற்பால் படத்தின் நாயகன் இயக்குநர் அமீருக்கும் எனக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சி. மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் சூட்டோடு சூட்டாக இப்படி ஒரு அரசியல் காதல் காமெடி படம் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் நூறு சதவீதம் கனெக்டாகும் என நினைக்கிறேன். இதுவரை பார்த்திராத ஒரு புது அமீரை ரசிகர்கள் இப்படத்தில் பார்க்கலாம்.
காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து ஏரியாவிலும் ஒரு மாஸ் எண்டர்டைனராக அதகளப்படுத்தியிருக்கிறார். கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு உயிர் தமிழுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்கிறார். .