”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடல் வெளியானது!
ஈ எஸ் புரடக்சன்’ மற்றும் ‘மச்சா ஸ்வாக் டான்ஸ்’ நிறுவன தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ் இசையில், எழில்வாணன் வடிவமைத்து உருவாக்கியிருக்கும் புதிய ஆல்பம் பாடலுக்கு , ”ஹாஃப் பாட்டில்”என பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய கால இளைஞர்களின் காதலையும், ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல்காட்சியில் எழில்வாணன் ஈ வி , ‘பிக்பாஸ்’ ரவீனா மற்றும் ரேணுகா(சிறப்பு தோற்றம் )ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்பாடலுக்கான நடனத்தை மான்சி, ஈ வி இணைந்து அமைத்துள்ளனர்.
விரைவில் இணையத்தில் வெளியாகவுள்ள இப்பாடல் குறித்து இயக்குநர், நடிகர், எழில்வாணன் கூறுகையில்,”இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம். இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்.
நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன். என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள்.எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம்… அவர் எனக்கு ஒரு மேஜிக் (Work) எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி…