பிட்காயின் விவகாரம்.. எல் ஐ சி ஏஜென்ட் மண்டையை உடைத்த பிரபல நடிகை!


சுந்­தரா டிரா­வல்ஸ், அடா­வடி, காத்­த­வ­ராயன் உள்­ளிட்ட தமிழ் படங்­களில் கதாநாயகியாக ந டி த்துள்ளவர் நடிகை ராதா இவர் சாலிகிரா­மத்தில் குடும்­பத்து­டன் வசித்து வருகி­றார்.

இவ­ருக்கு நெற்குன்­றம் பல்­ல­வன் நகர் பகுதியைசேர்ந்த எல்.ஐ.சி ஏஜென்ட் முத்­துக்கிருஷ்­ணன் என்­ப­வர்கடந்த சில ஆண்டு­க­ளுக்கு முன்பு அறிமு­க­மானார். அப்போது “பிட் காயின்” மூலம்பணம் முதலீடு செய்­தால்மாதம்­தோ­றும் தொடர்ந்து நல்லவரு­மானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும், .இ தை­ய டு த் து முத்துகிருஷ்­ணன் மூலம் நடிகை ராதா ரூ.90 ஆயிரம் முதலீடு செய்­த­தாகவும் கூறப்­ப­டு­ கி­றது.

ஆனால் இது­நாள் வரை எந்­த­வொரு பண­மும் திரும்பி வரவில்லை. மாறாக முதலீடு செய்த பணத்­தை­யும் திருப்பி தரவில்லை என்று தெரிகி­றது. இந்த நிலை­யில் நேற்று முன்தினம் வட­பழனி, பெரி­யார் பாதை­யில் நண்­பர் ஒரு­வர் நடத்தி வரும் டிரா­வல்ஸ்அலு­வ­ல­கத்திற்கு வந்த முத்­துகிருஷ்­ணன் மற்றும் நடிகைராதா ஆகி­யோர் இடையேமுதலீடு செய்த பணம் தொடர்­பாக தக­ராறு ஏற்­பட்­டது.இதில் ஆத்திர­ம­டைந்த ராதா மற்றும் அவ­ரது தாய்பவானி, மகன் தருண் ஆகிய3 பே ரும் சே ர்ந் து முத்துகிருஷ்­ணனை சர­மாரி­ யாக அடித்து உதைத்­த­னர்.

இதில் தலை­யில் அடிபட்டு பலத்தகாய­ம­டைந்த முத்துகி­ருஷ்­ணன் சிகிச்­சைக்­காக ராயப்­பேட்டை அரசு ஆஸ்­பத்திரியில் அனு­ம­திக்­கப்­பட்டுள்­ளார்.இந்த நிலை­யில் தன் மீதுகொலை­வெறி தாக்குதலநடத்திய நடிகை ராதா உள்­ளிட்ட 3பேர் மீதும் உரிய சட்டநட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வட­பழனி போலீ­சில் முத்துகிருஷ்­ணன் புகார் அளித்துள்­ளார் இது தொடர்­பாக போலீசார் இருதரப்பினர் மீதும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே நடிகை ராதா இவர் மீது கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவர் மகன் தருண் மீதும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது