‘துப்பாக்கி’ தூக்கிய நடிகை சமந்தா!
நடிகை சமந்தாவின் பிறந்தநாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த வருடம் அவர் உடல்நல குறைவு காரணமாக நடிப்புக்கு ஒய்வு கொடுத்து விட்டு,சில மாதங்கள் ஓய்வு எடுத்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது குணமாகி மீண்டும் பாலிவுட்டில் தொடர்,ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சமந்தா, தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இப் படத்தின் டைட்டில் வீடியோ சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
’பங்காரம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதிரடி ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படபோஸ்டரில் சமந்தா உடல் பல இடங்களில் ரத்தக்கறையுடன் , கையில் ஆவேசமாக துப்பாக்கி ஏந்திய நிலையில் காட்சியளிக்கிறார். சமந்தாவின் இப்போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.