இயக்குனர் செல்வராகவன் சொன்ன ‘புது ‘ தத்துவம்!

தமிழ்த்திரையுலகில்  ’துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமாகி அதன் பின் ’காதல் கொண்டேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர்  செல்வராகவன்.  தொடர்ந்து,’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மயக்கம் என்ன’ ’இரண்டாம் உலகம்’ ’என் ஜி கே’ ’நெஞ்சம் மறப்பதில்லை’ ’நானே வருவேன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது நடிகராகவும் மாறி பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது அவர் ’7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் என்பதும் விரைவில் அவர் ’ஆயிரத்தில் ஒருவன்’ ’புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் செல்வராகவன் அதில் அடிக்கடி தனது ‘தத்துவ'(?) கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,”ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடி தான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்