யோகிபாபுவின் நடிப்பில் உருவான ‘ஜோரா கைய தட்டுங்க’!
‘வாமா என்டர்டெயின்மென்ட்’ பட நிறுவனம் சார்பில்,ஜாகிர் அலி யின் தயாரிப்பில், ‘சரவணா பிலிம் ஆர்ட்ஸ் ‘சரவணன் இணை தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம்,’ஜோரா கைய தட்டுங்க’ இப்படத்தில் நகைச்சுவை நடிகர் “யோகி பாபு” இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருடன் ஹரிஸ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ஶ்ரீதர்.உள்பட பலர் நடித்து வருகின்றனர் இப்படத்தை தீக்குளிக்கும் பச்சை மரம் ” படத்தை இயக்கிய .வினிஷ் மில்லினியம் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மது அம்படின் ஒளிப்பதிவில்,எஸ்.என். அருணகிரி இசையமைத்து வருகிறார்.
ஜித்தன் ரோஷனின் பின்னணி இசையில் உருவாகி வரும் இப்படம்,யோகி பாபுவின் திரைப்பயணத்தில் \ மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இதன் இறுதிக்கட்ட பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.என்கிறார்கள்.