மாயி பட இயக்குனர் திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!!

கடந்த 1996-ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். தொடர்ந்து சரத்குமார் உடன் கூட்டணி அமைத்து . மாயி. திவான் ஆகிய படங்களை இயக்கினார் இப்படங்களைத்தொடர்ந்து ஜீவன் நடித்த அதிபர் என்கிற படத்தை இயக்கிய சூர்ய பிரகாஷ், பின்னர் இயக்கிய ‘வருசநாடு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. . இந்த நிலையில் இயக்குனர் சூர்ய பிரகாஷ் இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.. அவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.