மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சத்யராஜ்!
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்துமுடித்துள்ளார். ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் உடனடியாக அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் இப்படத்துக்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ளது .
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கஉள்ளது சமீபத்தில் இப்படத்தின் புரமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் ரஜினிக்கு நண்பராக நடிப்பது உறுதியாகியுள்ளது.