இமயமலையில் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் இமயமலைக்கு தன்னுடைய ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஒரு வார கால பயணமாக திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த் தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தன்னுடைய ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்,கேதார் நாத் கோவில்களில் இன்று ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.