சின்னத்திரை நடிகர் மதுரைமுத்துவின் முதல் மனைவி லேகா 2016ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், மனைவியின் நெருங்கிய தோழி பல் மருத்தவர் நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்
மனைவி இறந்த சில மாதங்களிலேயே அவரது தோழியை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டதால், கடும் விமர்சனத்துக்கும் ஆளானார். இந்நிலையில், மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி நீத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்றில் , எனக்குன்னு ஒரு உயிர் வேண்டும். அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க் கொண்டே இருக்கிறேன் என்று அழுதபடி பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும், இருவரும் பிரிகிறார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இன்னொரு வீடியோவில், ‘எவ்வளவோ காயங்களை அவன் அவளுக்காக கொடுத்த போதிலும் கூட அவள் அவரை விட்டு பிரிந்து போக வேண்டும் என்று நினைத்ததில்லை. பலமுறை காயப்பட்ட போதும் கூட பிரிய வேண்டும் என்று துளி அளவும் நினைத்ததே இல்லை’ என்றும் கூறியுள்ளார் இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், ‘மதுரை முத்துக்கும் இரண்டாவது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும், இனிஇவர்கள் சேரவாய்ப்பே இல்லை என்று இணையத்தில்பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து மதுரை முத்து தரப்பில் எந்த கருத்தும் இதுவரை வெளியாக வில்லை