‘இந்தியன்-2’ படத்தின் மிரட்டல் டிரைலர் வெளியானது!
கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பல ஆண்டுகளாக உருவாகி வந்தது. பல தடைகளை தாண்டி ஒரு வழியாக இப்படத்தின் பணிகள் முடிந்து,தற்போது இப்பட்த்தின் இந்தியன்-2 டிரைலர் வெளியாகியிருக்கிறது.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையாக உருவாகியிருக்கிறது இந்தியன் திரைப்படம். முதல் பாகத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், இந்த படத்தில் கமல்ஹாசன் வெவ்வேறு கெட்-அப்பில் தோன்றியிருக்கிறார்.
இதனால், இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு பன்மடங்காக எகிறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இப்படத்தின் டிரைலர் வைரலாக பரவி வரும் நிலையில்,இந்தியன் 2 அடுத்த மாதம் (ஜூலை) 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.