அஜித்தின்’குட் பேட் அக்லி’ 2வது லுக் போஸ்டர்..வெளியானது!
நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஏற்கனவே நடந்து வந்த ‘விடாமுயற்சி’யின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித்,அஜர்பைஜான் சென்றுள்ளார்.அங்கு அஜித், ஆரவ் சம்பந்தப்பட்ட படு மிரட்டலான கார் சண்டைக் காட்சி உள்ளிட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது..
இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும் அஜித்குமாரின் மேனேஜர், சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட்டினை வெளியிட்டுள்ளார்
இந்த ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சியும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி படமும் ரிலீசாக உள்ளதாம். விடா முயற்சி படத்தை பொறுத்தவரை அஜித்,தன்னுடைய போர்ஷனை முழுமையாக முடித்து விட்டே அடுத்ததாக வரும் ஆகஸ்ட்மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் 2வது ஷெட்யூலில் மீண்டும் இணையவுள்ளார்.