அம்பானி கொடுத்த 2 கோடி ரூபா பரிசு !

கோடிக்கணக்கான பணம்.. தண்ணீராக ஓடியது. ஒரு மாநிலத்துக்கான பட்ஜெட் போட்டுவிடலாம் என்கிறார்கள்.  அம்பானி வீட்டுக் கல்யாணம்தான் உலகிலேயே அதிக செலவில் நடத்தப்பட்ட திருமணம் என்கிறார்கள். 

மாநிலங்களில் இருந்து திருமணம் நடந்த மும்பைக்கு செல்ல திரையுலக நடிகர்,நடிகையர்க்கு தனி விமானங்கள்.!உலகின் பல பகுதிகளில் இருந்து விருந்தினர்கள் வந்து குவிய இந்திய துணைக் கண்டமே விக்கித்துப்போனது. வெள்ளப் பெருக்கில் பல மாநிலங்கள் மூச்சடைத்துப் போய் கிடந்தன. அதை புறம் தள்ளிவிட்டு பிரதமர் மோடி அம்பானி வீட்டுக் கல்யாணத்துக்கு சென்றிருந்தார் என்றால் அம்பானியின் அருமை பெருமை புரிந்திருக்கும். இந்திய அரசியலில் முக்கிய மந்திரவாதி அம்பானி.!

மணமகனின் நண்பர்களுக்கு 2 கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு மட்டுமா ?

இல்லை !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஆந்திர ஸ்டார்கள் வெங்கடேஷ்,பவன் கல்யாண்,மகேஷ் பாபு ,ராம் சரண், நம்ம ஊரு இயக்குநர் அட்லி ஆகியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப் பட்டதாக சொல்கிறார்கள். பிறகென்ன,

அங்கப் பிரதட்சணமே பண்ணலாம்.!