சென்னையில் 25 ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து!
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில்நடந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை படப்பிடிப்பின் போது 20 அடி உயரத்தில் இருந்து எந்தவொரு பாதுகாப்பும் இன்றி கீழே விழுந்ததில் உயிரிழந்தது சினிமா துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதையடுத்து சினிமா படப்பிடிப்புகளில் சண்டை பயிற்சியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நடைபெறும் கூட்டம் வரும் ஜூலை 25ம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த நாளில் அனைத்து சினிமா படப்பிடிப்புகளையும் ஒரு நாள் ரத்து செய்ய பெப்சி அமைப்பு முடிவு செய்துள்ளது.படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சி கலைஞர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் ஆம்புலன்ஸ் ஒன்றும் மருத்துவ உதவிகளும் கட்டாயம் தேவை என்பதை வலியுறுத்தி அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் எந்தவொரு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறாது என பெப்சி அறிவித்துள்ளது