நிர்வாணமாக நடிப்பதை நிறுத்தப் போவதில்லை! பிரபல ஹாலிவுட் நடிகை அதிரடி!!

ஹாலிவுட்டில்  கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஜோம்பி மாஸ் டிஸ்ட்ரக்‌ஷன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமான  சிட்னி ஸ்வீனி, கடந்த 2019ம் ஆண்டு கதாநாயகியாக தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து தொடர்ந்து  ஹாலிவுட் படங்கள், டிவி தொடர்கள், வெப்சீரிஸ் என கடந்த சில ஆண்டுகளில் வெளுத்து வாங்கி வரும் சிட்னி ஸ்வீனி 26 வயதிலேயே ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி,உலகளவில் தனக்கென  ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இதற்கு காரணம் தாராளமாக ஆடைகளை துறந்து பிறந்த மேனியாக அவர் நடிப்பது தான்.இதன் காரணமாக சிட்னி ஸ்வீனி நடித்தாலே  நிச்சயம்  படுக்கையறை காட்சிகள் இருப்பது உறுதி என்கிற அளவுக்கு மோசமான பெயரும் சிட்னி ஸ்வீனிக்கு உண்டு. இது குறித்து சமீபத்தில் நடந்த சினிமா  நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு சிட்னி ஸ்வீனி கொஞ்சமும் தயங்காமல்,”நான் எப்போதும் என்னுடைய இயக்குநர்களை நம்புகிறேன். அவர்கள் கதைக்குத் தேவையான காட்சிகளைத் தான் வைக்கின்றனர். கண்டிப்பாக ஹாலிவுட்டில் நிர்வாணமாக நடிக்க நான் வெட்கமே படவில்லை. தொடர்ந்து நிர்வாணமாக நடிப்பேன். அதை நான் நிறுத்தப் போவதில்லை என பதில் அளித்துள்ளார்.சிட்னி ஸ்வீனியின் இந்த பேட்டி குறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.