`மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி : உறுதிமொழியுடன் கட்சி கொடியேற்றி வைத்தார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய், கடந்த மார்ச் மாதம், `தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினர்.  இந்நிலையில்  இன்று  காலை தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய்  அறிமுகப்படுத்தப்படுவதாகவும் இதற்காக 300 க்கும் மேற்பட்ட முக்கிய கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளதாகவும் இந்நிகழ்வில் வரும் செப்டம்பர் 22 மத்தேதி நடத்தப்பட்ட உள்ள தனது கட்சி மாநாடு குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், `நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும்’ என கொடி அறிமுகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்தக் கட்சியின் தலைவர் விஜய், நேற்று   மாலை முக்கிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.அந்த அறிக்கையில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22.நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்றும்  விஜய் குறிப்பிட்டிருந்தார்.அதை தொடர்ந்து கொடியேற்று நிகழ்வில் கட்சியினர் ஏற்கும் உறுதி மொழியையும் அவர் வெளியிட்டுள்ளார்  அதில்,அதில், முதல் உறுதி மொழி நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகம் எப்போதும் போற்றப்படும்.இரண்டாவது உறுதிமொழி, அன்னை தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவோம்.மூன்றாவது உறுதிமொழி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் வகையில் செயல்படுவோம். மக்களாட்சி, மதச்சார்பின்மை சமூகநீதி வழியில் நல்ல சேவகராக கடமை ஆற்றுவேன்.  நான்காவது உறுதிமொழி, சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் சமூகநீதி வழிப்பாதையில் நடிகர் விஜய்யின் கட்சியும் பயணிக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணி முதலே   சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தமிழகம்  முழுவதுமிருந்தும் ஏராளமான முக்கிய நிர்வாகிகள் வரத் கொடியேறு  தொடங்கினர் அவர்களிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர் . அவர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு நுழை வாயிலேயே அதை வாங்கி வைத்து கொண்டனர் , முன்னதாக அவர்களுக்கு காலை  சிற்றுண்டி வழங்கப்பட்டது.  அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ்  பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜயின்  பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் தாய் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டனர்  இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வீட்டில் இருந்து இன்று காலை 9 மணிக்கு காரில் புறப்பட்டு  பனையூர் அலுவலகத்திற்கு நிர்வாகிகள் புடை சூழ வந்தார். 9:15 மணிக்கு  அனைவரும் கட்சியின் உறுதி மொழியை விஜய் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து   அங்கு அமைக்கப்பட்டு இருந்த 45அடி உயர கொடி கம்பத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள்  நிறத்திலான  கொடியை தொண்டர்களின்  கரவொலி மற்றும் முழக்கத்துடன்   விஜய் கொடியை ஏற்றி வைத்தார் .

.