ஜெயம் ரவிக்கும் எனக்கும் இருக்கும் உறவு…… உண்மையை உடைத்த கெனிஷா!
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவி விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.இது தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்துக்கு காரணமே பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவர் தான் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி பெரிய சர்ச்சையாக மாறியது.இப்புகாருக்கு ஜெயம் ரவி மறுப்பும் தெரிவித்து, ‘அவர் ஒரு சைக்காலஜிஸ்ட் அவர் ஒரு நல்ல நண்பர் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் தற்போது ஆர்த்தியின் ஈசிஆர் வீட்டில் உள்ள தனது தன்னுடைய கார், பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமைகளை மீட்டு தருமாறு
போலீசிலும் புகார் அளித்துள்ளார்
இந்நிலையில் ஜெயம் ரவி விவகாரம் குறித்து பாடகி கெனிஷாகூறியுள்ளதாவது,”ஜெயம் ரவிக்கும் எனக்கும் இருக்கும் உறவு உண்மைதான். ஆனால் அந்து நட்பு ரீதியானதாகவும், தொழில்முறையாகவும் இருக்கிறது. அவர் எனது வாடிக்கையாளர் அவ்வளவுதான். அவர்களது விவாகரத்துக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். அது முழுக்க முழுக்க பொய் என்பதை இங்கே நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.இது உங்கள் வீட்டு பிரச்னை இல்லை. இது வேறு ஒருவரது குடும்ப பிரச்னை. அதிலிருந்து விலகியே இருங்கள். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். அதற்கு நேரம் இல்லை. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆர்த்திக்கு ரவி நோட்டீஸ் அனுப்பும்வரைக்குமே இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது” என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்