முத்துராமலிங்கத் தேவருக்கு நடிகர் விஜய் மலர் தூவி மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்தது . இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
இது குறித்து நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் , இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.என பதிவிட்டுள்ளார்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/pLo9FFF4S4
— TVK Vijay (@tvkvijayhq) October 30, 2024