விஜய் மாநாடு வெற்றி தான்!- நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!!
தீபாவளி பண்டிகையை ஒட்டி போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ள ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமாக காணப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்க வேண்டும்” நடிகர் விஜயின் மாநாடு பற்றிய கேள்விக்கு, “மாநாடு உண்மையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.” இவ்வாறு அவர் கூறினார்