மாமனுக்காக சூரியுடன் இணைந்த ஐஸ்வர்யா லட்சுமி!

லார்க் ஸ்டுடியோஸ்  சார்பில் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் புதிய  படத்தை, விலங்கு வெப் தொடரை இயக்கிய  பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார்.   இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா  லட்சுமி நடிக்கிறார்.இவர்களுடன்  நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.’கருடன்’ படத்தின்  வெற்றிக்குப்பிறகு, லார்க் ஸ்டுடியோஸ்   தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கி வருவதாக இயக்குனர்  பிரசாந்த் பாண்டியராஜன் கூறுகிறார். இசை – ஹேசம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்.