சர்வதேச விருதுகளைகுவித்து வரும் வென்ற குறும்பட இயக்குநர்!
சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக அதே துறையில் 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட, ஜூட் பீட்டர் டேமியான், டைரக்சன் மீது இருக்கும் ஆர்வத்தால் எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் பயிற்சி பெற்று, ’சஷ்தி’, ‘சரஸ்’ ‘ஹன்னா’ ஆகிய 3 குறும்படங்களை இயக்கியுள்ளார். தாய், மகன் பாசத்தை மையப்படுத்தி உருவான முதல் குறும்படமான ‘சஷ்தி’ 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 75க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. இதில் செம்மலர் அன்னம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அடுத்ததாக பொருளாதரத்தில் பின் தங்கிய பெண் எப்படி தனது மகனுக்கு மிக உயரிய கல்வி கிடைக்க போராடுகிறாள் என்பதை மையப்படுத்தி உருவான இரண்டாவது குறும்படமான ‘சரஸ்’ 20 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 70க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. இதில் சரஸ் கதாபாத்திரத்தில் நீலிமா ராணி நடித்துள்ளார்.தற்போது ஹன்னா என்கிற தனது மூன்றாவது குறும் படத்தையும் இயக்கி முடித்துள்ளார் . இதில்,ஐஸ்வர்யா, ஸ்ரீனிவாஸ் பொம்மளி, மார்கரிடா, ராகேஷ் சிங், சந்திரசேகர் சி.பி ஆகியோர் நடித்துள்ளனர்.இது தற்போது வரை 9 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 25க்கு மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. மேலும் பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.வெளிநாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து அழைத்து வரும் வசதியான இளைஞன் ஒருவன் இங்கே அவளுடன் சந்தோஷமாக குடித்தனம் நடத்துகிறான். திடீரென ஒருநாள் அவள் தன் நாட்டிற்காக கடமையாற்ற கிளம்பவேண்டிய சூழலில் கணவனை பிரிந்து சொந்த நாட்டிற்கு கிளம்பிச் செல்கிறாள். அவள் திரும்பி வருவாளா ? இங்கே மனைவியை பிரிந்த இளைஞனின் நிலை என்ன என்பதை அழகாக விவரிக்கிறது இந்த குறும்படங்களின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசுகையில்,”ஜூட் பீட்டர் டேமியான், தான் பணிபுரியும் துறை வேறு என்றாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் பயிற்சி எடுத்து நேர்த்தியாக மூன்று குறும்படங்களை இயக்கி அவற்றிற்கு சர்வதேச அளவிலான விருதுகளையும் பெற்றுள்ளார். விரைவில் அவர் திரைப்படம் இயக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்