இயக்குனர் ஹரி-நயனுடன் விஜய்சேதுபதி புதிய கூட்டணி!
விடுதலை-2 படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில், தற்போது ‘ட்ரெயின்’ திரைப்படம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு பின்னர் அவர், மீண்டும் பிரேம்குமார் இயக்கத்தில் ’96’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் ஹரி உடன் விஜய்சேதுபதி முதன்முறையாக இணைய உள்ளாராம்.
இப்படத்தை நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதோடு, இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்சேதுபதி,நயன்தாரா இருவரும், நானும் ரெளடி தான், இமைக்கா நொடிகள் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிலையில்,தற்போது ஹரி இயக்கும் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைய உள்ளனர் தமிழ் திரையுலகில் சிங்கம், ஆறு, சாமி, வேல் என பல படங்களை இயக்கியுள்ள ஹரியின் இயக்கத்தில் , கடைசியாக விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.