பா.விஜய் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவான “அகத்தியா”!
“ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன ‘சிஜிஐ’தொழில் நுட்பத்துடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை பாடலாசிரியரும், இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.இப்படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோவை,தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இப்படம் குறித்து ஐசரி கே. கணேஷ் பகிர்ந்துகொண்டதாவது,”திகில்-தி ரில்லர் ஜானர் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, ‘அகத்தியா’ மூலம் இந்த அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். ‘அகத்தியா’ கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்” என்கிறார்.இப்படம் வரும் ஜனவரி 31 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.