அலங்கு .( விமர்சனம் .) வெறித்தனமான கேரக்டர்கள்.! ?
அலங்கு என்பது ஒரு வகை நாய் இனத்தின் பெயர். மற்றபடி அந்த இனத்தின் தொடர்பாக வேறு எந்த வகையான சிறப்புகளோ ,குறைகளோ சொல்லப்படவில்லை. இந்த கதையின் வேர் தெரிவது கேரள -தமிழக மனிதர்களிடையில் இருக்கிற புரிந்துணர்வு என்பதுதான் என் விமர்சனப்பார்வையில் படுகிறது. மூக்கு வளையம் போடக்கூடிய மலை வாழ் மக்களை வைத்து கதாசிரியர் கதை சொல்லியிருக்கிறார்.
இந்த படத்தின் சிறப்பு நாயக நடிகனின் நடிப்பும் ஒளிப்பதிவாளரின் திறமையும் தான்.!
குறிப்பிட்டத் தகுந்த மற்றொரு சிறப்பு தயாரிப்பாளர் ஆவார் . தமிழத் திரைப்பட உலகின் மீது கடுமையான விமர்சனங்களை சொல்லி வந்த பாமக நிறுவனர் திரு. ராமதாசின் பெயர்த்தி சங்கமித்ரா. மருத்துவர் அன்புமணியின் புதல்வி. வாழ்த்துவோம்.
கேரளத்தின் முன்னணி நடிகர்களான செம்பன் வினோத் ஜோஸ் ,அப்பானி சரத் ஆகியோரை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள். நாயகனாக அறிமுக நடிகர் குணாநிதி. இவருக்கு அலங்கு சிறப்பாக பயிற்சி அளித்து நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. நவரசமும் குணாநிதியின் நடிப்பில் ஒளிர்கிறது. கோலிவுட் இவருக்கு வாய்ப்புகள் வழங்கினால் சிறந்த நடிகர் தமிழுக்கு கிடைப்பார். வாழ்க குணாநிதி.
நாயகனின் அம்மாவாக ஸ்ரீ ரேகா. நல்ல தோற்றம் . ஒரு பெண்ணுக்கு வேண்டிய வீரம் ,விவேகம் அமைந்த கேரக்டர் . குண்டு விழிகளில் சாதுர்யம் . சிறப்பு ஸ்ரீ ரேகா . எத்தனை ஆண்கள் எதிர்த்து வந்தாலும் போராடும் புலிக்குண கேரக்டர்.
மனிதர்களில் எத்தனை நிறம் என்பதை உணர்த்துவதற்காக செம்பன் வினோத் ஜோஸ் கேரக்டர் . ஊரில் திரிகிற அத்தனை நாய்களையும்கொல்லச் சொல்கிற கொடூர மனம் . சரியாக பிரதிபலித்திருக்கிறார்.
காளிவெங்கட், ,தீக்ஷா,,சண்முகம் முத்துசாமி,கொற்றவை ஆகியோரின் கேரக்டர்கள் உறுத்தவில்லை .
தமிழநாட்டுக்கு கிடைத்திருக்கிற பெருமை ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் . இருண்ட காடுகள்,மலை வாழ் மக்களின் வாழ்வியல் இயல்பாக பதிவாகி இருக்கிறது.
இசையமைப்பாளர் அஜீஷ்,எடிட்டர் ஷான் லோகேஷ் ஆகியோர் இயக்குநர் எஸ். பி. சக்திவேலுக்கு துணையாக இருக்கிறார்கள்.
வழக்கமான ,அல்லது பழகிப்போன காட்சிகள் இல்லாமல் புதுசாக சொல்லவேண்டும் என்கிற அக்கரையுடன் கதை பின்னப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்களின் மனம் அறிந்து உழைத்திருக்கிறார்கள் . முன் யோசனையுடன் கேரக்டர்கள் படைக்கப்பட்டுள்ளன.
அலங்கு என்கிற பெயரில் மலை வாழ் மக்களின் வாழ்வியல் சொல்லப்பட்டிருக்கிறது.
மனதை பிசைகிறது !
–தேவிமணி .