ரஜினி ‘சுயநலவாதி’ கமல் ‘பொதுநல வாதி’! – இயக்குநர்,தயாரிப்பாளர் கே.ஆர்.பரபரப்பு பேட்டி !!
பிரபல இயக்குநர்,தயாரிப்பாளர் கே.ஆர், ரஜினிகாந்த் , கமல்ஹாசன் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ரஜினி சுயநலவாதி என்றும் கமல் பொதுநல வாதி என்றும் பேசியுள்ளது தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஜினி,கமல் குறித்து அவர் கூறியுள்ளதாவது,””ரஜினிகாந்த் ஒரு சுயநலவாதிதான். எப்போதும் வெல்ல வேண்டும்; தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் அந்த பணத்தை மீண்டும் எடுக்க வேண்டுன்; விநியோகஸ்தர்கள் வெல்ல வேண்டும் தனக்கு சம்பளம் சரியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும்தான் யோசிப்பார். அது அவருக்கு சரியாக படுவதால் அதனை அவர் செய்கிறார். உண்மையில் ஒரு நாளில் சில காட்சிகளை சுருக்கி எடுத்தால்கூட நல்லது என்றுதான் ரஜினிகாந்த் நினைப்பார்.
ஆனால் கமல் ஹாசனோ அப்படி இல்லை. அவர் தொடர்ந்து சோதனை முயற்சிகளை செய்துகொண்டே இருப்பார். அந்தப் படம் ஓடுகிறதோ, ஓடவில்லையோ அவர் அவருக்கான பாணியிலிருந்து விலகவேமாட்டார். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் வெல்ல வேண்டும் என்பதிலும்; தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதிலும் முனைப்பாக இருப்பார் அவர். தமிழ் சினிமாவில் பல விஷயங்களை முதன்முறையாக செய்தது அவர்தான். பல விஷயங்களை அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார் .