தலைகீழாக கவிழ்ந்த கார் ….அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்குமார்!
அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி, வரும் ஏப்ரல் 10 ம் தேதி வெளியாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் நிச்சயமாக ஹிட் அடிக்கும் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் வாலன்சியாவில் நடந்து வரும் கார் ரேஸில் 6ஆவது சுற்றின் போது அஜித் குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
இதில், அதிர்ஷ்டவசமாக அஜித் உயிர் தப்பியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதாவது ரேஸின்போது அஜித்குமார் விபத்துக்குள்ளாகும் வீடியோதான் அது. இன்னொரு காரில் மோதி அவரது கார் பல டைவ்களை அடித்திருக்கிறது. நல்வாய்ப்பாக அஜித்துக்கு காயங்கள் எதுவும் இல்லை. மேலும் இந்த ரேஸில் அவர் 14ஆவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்பெயின் நாட்டின் வேலன்சியாவில் நடந்த கார் பந்தயத்தில் ஐந்தாவது சுற்று அஜித்துக்கு நன்றாக இருந்தது. போட்டியில் 14ஆவது இடத்தை பிடித்தார். ஆறாவது சுற்றுதான் துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது. மற்ற கார்கள் மோதியதன் காரணமாக இரண்டு முறை விபத்துகளை சந்தித்தார். அவர் தவறு எதுவும் செய்யவில்லை.விபத்துகளில் சிக்கினாலும் மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்டார்.
அவரது விடாமுயற்சி வலிமைமிக்கது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.இதற்கு முன்னதாக ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் தொடரில் பங்கேற்றார். இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சியும் மேற்கொண்டார். கார் ரேஸ்க்காக தன்னுடைய் காரையும் வடிவமைத்தார். துபாய் கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்தில் அஜித்திற்கு எதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது