Tuesday, May 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘கேங்கர்ஸ்’ ( விமர்சனம்.) ரசிகர்களை மகிழ்விக்கும் சிரிப்புச் சரவெடி!

admin by admin
April 25, 2025
in Reviews
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்’ சார்பில், ஏ.சி.எஸ் அருண்குமார், ‘அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில், குஷ்பு சுந்தர் ஆகியோர், இணைந்து தயாரித்திருக்கும் படம், கேங்கர்ஸ். இதில், சுந்தர் .சி, வடிவேலு, காத்ரின் தெரசா, வாணிபோஜன், முனிஷ்காந்த் , பக்ஸ், காளை , ஹரிஷ் பேரடி , மைம் கோபி , அருள்தாஸ் , சந்தானபாரதி, விச்சு , மாஸ்டர் பிரபாகர், மதுசூதன் ராவ், ரிஷி ஆகியோர்களுடன் விமல் , கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
‘கேங்கர்ஸ்’ திரைப்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார், வெங்கட்ராகவன். இயக்கியிருக்கிறார், சுந்தர் சி. இசை – சி . சத்யா. ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி.

You might also like

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

சுந்தர். சி, படம் என்றாலே கலகலப்புக்கும், கிளுகிளுப்புக்கும் பஞ்சமிருக்காது. ஒவ்வொரு படத்திலுமே சுந்தர்.சி பொழுதுபோக்கு அம்சத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுத்துச்செல்வார். அதேபோல் ‘கேங்கர்ஸ்’ படத்தினையும் பொழுது போக்கு படமாக கொடுத்திருக்கிறார்.
மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இருவரும் சகோதரர்கள். ஊரின் முக்கிய மனிதர்களாகவும், பள்ளி கல்லூரி தாளாளர்களாக வலம் வருகிறார்கள். இவர்களது பள்ளியில், கேத்ரின் தெரசா ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்தப்பள்ளியில் படிக்கும் சிலர் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். ஒரு நாள், பள்ளியிலேயே நன்கு படிக்கும் மாணவி ஒருவர் காணாமல் போகிறார். இது குறித்து, ஆசிரியை கேத்ரின் தெரசா போலீஸூக்கு புகார் கொடுக்கிறார். அதுவே, அவருடைய உயிருக்கு அச்சுறத்தலாகிறது. அந்த நிலையில், அதே பள்ளியில் பணிபுரியும் உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தர் சி, அவரைக் காப்பாற்ற முன் வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை, எதிர்பாராத திருப்பங்களுடன், கலகலப்பாக சொல்வது தான் கேங்கர்ஸ்!

நீண்ட வருடங்களுக்குப்பிறகு, சுந்தர் சியும், வடிவேலும் ஒன்றாக இணைந்திருப்பது கேங்கர்ஸ் படத்தின் மிகப்பெரும் பலம். இந்த இருவரும் மீண்டும் இணைந்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஒரே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களாக, இவர்களது கூட்டணி வெடிச்சிரிப்பினை வரவழைக்கிறது. அதிலும், உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் வைகை புயல் வடிவேலு, சிரிப்புச்சரவெடியை கொளுத்திப்போடுகிறார், படம் முழுவதும். நீண்ட நாளைக்குப்பிறகு பலவிதமான கெட்டப்புகளில், வடிவேலு தனது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். சுந்தர் சி தனது அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலமாக அவரது ரசிகர்களை, திருப்திப் படுத்தியிருக்கிறார்.

நாயகியாக கேத்ரின் தெரசா. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என படம் முழுவதும் வலம் வருகிறார். கவனிக்கத்தக்க வகையில் நடித்திருக்கிறார்.

வாணி போஜன், நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவு! ஓகேவான நடிப்பு!

வடிவேலு, சுந்தர் சி இவர்களோடு சேர்ந்து, மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, காளை, பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு ஆகியோர், அனைவருமே ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

இசையமைப்பாளர் சத்யா, கமர்ஷியல் படத்திற்கான பாடல்களையும், பின்னணி இசையையும் கச்சிதமாக கொடுத்திருக்கிறார். பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர், இ.கிருஷ்ண மூர்த்தியின் ஒளிப்பதிவினால் படம் கலர்ஃபுல்லாக இருக்கிறது.
வெங்கட் ராகவனின் திரைக்கதை, வசனம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.
இயக்கியிருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, தனது வழக்கமான பாணியின் மூலமாக, முழுக்க முழுக்க சிரிக்கும்படியான, ஒரு என்டர்டெயின்மென்ட் படத்தினை கொடுத்துள்ளார்.

‘கேங்கர்ஸ்’ – ரசிகர்களை மகிழ்விக்கும் சிரிப்புச்சரவெடி!

admin

admin

Related Posts

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!
Reviews

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

by admin
May 25, 2026
’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!
Reviews

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

by admin
May 16, 2026
‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!
Reviews

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

by admin
May 16, 2026
‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!
Reviews

‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!

by admin
May 19, 2026
‘29’ – விமர்சனம்!
Reviews

‘29’ – விமர்சனம்!

by admin
May 9, 2026

Recent News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?