ஒரு கனவு போல!

IMG_0885இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ ஒரு கனவு போல “   இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா  இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, வெற்றிவேல் ராஜா, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.  IMG_0580கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.                                            ஒளிப்பதிவு   –   அழகப்பன்.N  இவர் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். அதில் 40 படங்களின் மூலம் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். IMG_0071  இப்படம் குறித்து இயக்குனர் –  V.C.விஜய்சங்கர்  கூறியதாவது,மனிதனின் இதயத்தில் ஏற்படும் வன்முறையான எண்ணங்களை, வெளியிட முடியாத உணர்வுகளை நாமே புரிந்து கொண்டு சமூக நீதிக்கு ஏற்ப நம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.  என்பதை உளவியல் ரீதியாக உணர்த்தும் திரைப்படம் இது. நட்பின் ஆழத்தையும் – கற்பின் அர்த்ததையும்  இந்த திரைப்படத்தில்  அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். பெண்மையின்  உள் உணர்வுகளை இதில்  அதிகமாக  அலசி இருக்கிறோம். என்கிறார்.