சயின்ஸ் பிக்சன் கதையில் சூரி!

தமிழ்த்திரையுலகில்  நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றி மாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ள சூரி, தற்போது ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று நேற்று நாளை,அயலான் ஆகிய  2 சயின்ஸ் பிக்சன் கதைகளை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இப்படத்தின் திரைக்கதையையும் தனது பாணியிலேயேவித்தியாசமான கதைக்களத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைத்துள்ளாராம்.  சூரி நடித்து வரும் ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வரும் ஜனவரியில் சூரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.நடிகர் சூரி தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சூரியுடன் சத்யராஜ், மகிமா நம்பியார், சுஹாஸ், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ், ரவீந்திரா விஜய் உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்கும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் கதைக்களமாக உருவாகியுள்ள இப்படத்தில் சூரி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.