கிறிஸ்துமஸ் விடுமுறையை குறி வைக்கும் ”வா வாத்தியார் ‘!
சூது கவ்வும் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் நலன் குமாரசாமி, கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம்,இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில்,தற்போது இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ மற்றும் ‘டூட்’, துருவ் விக்ரமின் ‘பைசன்’ மற்றும் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.வா வாத்தியார் திரைப்படமும் இந்தப் பட்டியலில் சேரும் என்றும்,கைதி, சர்தார் படங்களை போல தீபாவளிக்கு கார்த்தி படம் வெளியானால் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு ஏமாற்றமளித்துள்ளது.அதே சமயம் கிறிஸ்துமஸ் விடுமுறையை இலக்காகக் கொண்டு படம் வெளியாகும் பட்சத்தில், அதுவும் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சற்று மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.