
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘கார்மேனி செல்வம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இதில்,சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும், கவுதம் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர்.இப்படம் நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் ராம் சக்ரி கூறுகையில், “அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்,” என்கிறார். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தில், தமிழ் திரையுலகில் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் செய்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.












