‘பருத்தி வீரன்’ கிராமிய பாடகி லட்சுமி காலமானார்!

கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ உள்ளிட்ட கிராமிய பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (வயது 75) . இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமைந்த அந்தப் பாடல்கள் கிராமிய வாழ்வின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தின. அமீர் இயக்கிய இப்படம் தமிழ் சினிமாவில் மைல்கல்லாக அமைந்தது. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர் இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பாடகி லட்சுமி அம்மாள்  இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு திரைத்துறையினர், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.