‘ஆஸ்கர் 2026’ பட்டியலில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ !

அபிஷன் ஜீவன் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியாகி வந்து தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆஸ்கர் 2026 சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பத்துடன் தப்பி, இந்தியாவிற்கு வரும் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை, அவர்கள் தமிழ்நாடு வந்து வேலைவாய்ப்புக்காக போராடுவது உள்ளிட்டவற்றை மையமாக வைத்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமாக பொருந்தி இருந்தது, திரைக்கதைக்கு ஏற்ப இசை அமைக்கப்பட்டது ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.இந்நிலையில்  உலகத் திரைத் துறையில் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருது விழா நடப்பாண்டில் 98-வது முறையாக நடைபெற இருக்கிறது. இதற்கு மொத்தமாக 317 திரைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், வெறும் 201 படங்கள் மட்டுமே தேர்வாகியுள்ளன. அந்த வகையில், ஆஸ்கர் 2026 சிறந்த படத்திற்கான பட்டியலில் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் தேர்வாகி உள்ளது. தேர்வாகியுள்ள படங்களுக்கான ஓட்டெடுப்பு வரும் 12 ஆம் தேதி நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.