நயினார் நாகேந்திரனின் அருவெறுக்கத்தக்க அரசியல்! நடிகை திரிஷா கடும் கண்டனம்!!

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி தலைவர் இப்படி பேசலாமா என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. சுதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் நடிகை திரிஷாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் நிதேஷ் நடராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “அதில் அவர் கூறியிருப்பாதவது:-

நயினார் நாகேந்திரனின் அருவருக்கத்தக்க! நடிகை திரிஷா கடும் கண்டனம்!!
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி தலைவர் இப்படி பேசலாமா என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. சுதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் நடிகை திரிஷாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் நிதேஷ் நடராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மாநிலத்தின் அரசியல் தளத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவரிடமிருந்து இத்தகைய அருவருக்கத்தக்க மற்றும் தேவையற்ற கருத்தை என் வாடிக்கையாளர் (திரிஷா) எதிர்பார்க்கவில்லை.

அவருக்கு எந்தவித அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்றும் அதற்கான உத்தேசமோ இல்லை என்பதை ஏற்கெனவே அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் என்று வரும்போது கடந்த காலங்களில் எடுக்கப்பட்டதைப் போலவே நடுநிலையான நிலைப்பாட்டையே அவர் எப்போதும் எடுத்துள்ளார்.

தன்னுடைய திறமை வாயிலாகவே தான் அறியப்பட வேண்டும் என்றும் எந்தவித அரசியல் தொடர்புடனும் அல்ல என்றும் அவர் விரும்புகிறார். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொது கருத்து அல்லது விவாதத்திற்கான ஒன்றாக மாறிவிடக் கூடாது. பொது கருத்துகளை வெளியிடும்போது உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்புணர்வை கடைபிடிக்க வேண்டும்.

அவருக்கு தொடர்பில்லாத விஷயங்களில் என் வாடிக்கையாளரின் பெயரை இணைத்துப் பேசப்படக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திரிஷா தொடர்பான கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனிப்பட்ட முறையில் யார் மனதும் புண்படும் வகையில் பேசமாட்டேன் என கூறியுள்ளார்