Sunday, May 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ஆகஸ்ட் மாதம் 2026 வெளியாகிறது!

admin by admin
May 9, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்,  தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.

தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath )  , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான்  தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக,  இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.

மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“  திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக  “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்-இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய்  அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.

admin

admin

Related Posts

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!
News

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

by admin
May 10, 2026
‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!
News

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

by admin
May 9, 2026
விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!
News

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

by admin
May 9, 2026
சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா  கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’!
News

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’!

by admin
May 8, 2026
கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி”!
News

கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி”!

by admin
May 8, 2026

Recent News

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

‘நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

May 9, 2026
விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ ஸ்பெஷல் போஸ்டர்!

May 9, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ஆகஸ்ட் மாதம் 2026 வெளியாகிறது!

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ஆகஸ்ட் மாதம் 2026 வெளியாகிறது!

May 9, 2026
சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா  கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’!

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’!

May 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?