Sunday, May 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!

admin by admin
May 16, 2026
in Reviews
432 4
0
604
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரையைச் சுற்றியிருக்கிற மக்கள் மட்டுமின்றி, பல மக்களுக்கு இன்றுவரை தீராத வழக்குகளை எல்லாம் தீர்த்து வைக்கும் காவல் தெய்வமாக, மதுரை அழகர் மலையில் வீற்றிருக்கும் தெய்வம் கருப்பு. குடும்ப பிரச்சனை, சமூக பிரச்சனை என அனைத்தையும் தீர்த்து வைப்பார், என  இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.  இதை பிரதிபலிக்கும்படியாக உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான், கருப்பு.

இதில் சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி ,  மலையாள நடிகர் இந்திரன்ஸ், நட்டி – நட்ராஜ், சுவாசிகா , ஷிவதா, ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், நமோ நாராயணா, வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். வில்லனாக நடித்திருப்பதுடன் எழுதி இயக்கியிருக்கிறார், ஆர். ஜே. பாலாஜி. ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ‘ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்’ சார்பில், எஸ் .ஆர். பிரகாஷ் பாபு , எஸ். ஆர். பிரபு தயாரித்துள்ளனர்.

You might also like

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

‘29’ – விமர்சனம்!

இந்திரன்ஸ் கேரளாவிலிருந்து தனது மகள் அனகா மாயாவின் உயிர் காக்கும் சிகிச்சைக்காக சென்னை வருகிறார். மருத்துவ செலவுக்காக 60 பவுன் நகையை எடுத்து வருகிறார். அப்போது அது திருடு போகிறது. இதனால், மீட்டுக்கொடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். காவலர்கள் திருடர்களிடமிருந்து 45 பவுனை மீட்கின்றனர். அதை கோர்ட் மூலம் பெற்றுக் கொள்ளும்படி சொல்கின்றனர். கோர்ட்டில் செல்வாக்குமிக்க வழக்கறிஞர் ஆர். ஜே. பாலாஜியின் கண் அசைவில் மொத்தக் கோர்ட்டும் செயல்பட்டு வருகிறது. இந்திரன்ஸ் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மனம் வெறுத்துப்போகும் இந்திரன்ஸ் கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பசாமி சிலையிடம் வேண்டுகோள் வைக்கிறார். அதன் பிறகு கருப்பசாமியாக சூர்யா இந்திரன்ஸ் வழக்கை கையில் எடுக்கிறார். அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆர். ஜே. பாலாஜியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் கதாநாயகன் அவராகவே தெரிகிறார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சூர்யாவுக்காக எழுதப்பட்ட காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லை. இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது.

பேபி கண்ணன், என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, படம் முழுவதும் வலம் வருகிறார். நாயகனுக்குரிய அறிமுக காட்சிகளுடன் அவரை முன்னிலைப்படுத்தும் காட்சிகளில் சில மட்டும் ரசிக்க வைக்கின்றன.

வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, சில காட்சிகளிலும் வந்து போவதோடு பாடல் காட்சியில் ஆட்டமும் போடுகிறார்.

நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி,  இந்திரன்ஸ், சுவாசிகா, ஷிவதா போன்றோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. கண்களை உறுத்தும் சிவப்புக்கலரை குறைவாக பயன்படுத்தியிருக்கலாம். மற்றபடி ஓகே! ஒவ்வொரு காட்சியிலும் பிதுங்கி வழியும் கூட்டம்! அது, திரைக்கதைக்கு படு செயற்கையான காட்சிகளாக இருக்கிறது. சண்டை காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸும் உறுத்தலாக இருக்கிறது.

இந்தப்படத்தின் மூலமாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிமுகமாகியிருக்கிறார். பெரிதாக ஈர்க்கவில்லை.

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்ட முயற்சித்திருக்கிறார். இயக்குவதை விட நடிப்பதில் அவரது அக்கறை வெளிப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. நேர்த்தியற்ற திரைக்கதையும், சுவாரசியமற்ற காட்சிகளும் படத்தின் பலவீனம்.

கருப்பு  – கட்டிப் போடப்பட்டிருக்கிறது!

admin

admin

Related Posts

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!
Reviews

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

by admin
May 16, 2026
‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!
Reviews

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

by admin
May 16, 2026
‘29’ – விமர்சனம்!
Reviews

‘29’ – விமர்சனம்!

by admin
May 9, 2026
‘கர’ – (விமர்சனம்.) வங்கிகளின் கறை!
Reviews

‘கர’ – (விமர்சனம்.) வங்கிகளின் கறை!

by admin
May 1, 2026
‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast)  –  விமர்சனம்!
Reviews

‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast)  –  விமர்சனம்!

by admin
April 24, 2026

Recent News

கலையரசன் நடித்த ‘கொலைச் சேவல்’ ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

கலையரசன் நடித்த ‘கொலைச் சேவல்’ ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

May 17, 2026
போஸ் வெங்கட், காயத்ரி நடிப்பில் உருவான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!

போஸ் வெங்கட், காயத்ரி நடிப்பில் உருவான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!

May 17, 2026
“பேங் பேங்”  படப்பிடிப்பு  நிறைவடைந்தது!

“பேங் பேங்” படப்பிடிப்பு நிறைவடைந்தது!

May 17, 2026
ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காப்பாத்துங்க- கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காப்பாத்துங்க- கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை

May 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?