நடிகர் ரவி மோகன்,ஆர்த்தி ரவிக்கு இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,ரவி மோகன் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உட்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்த்தி தாக்கல் மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்












