நடிகர் விஜய்யுடன் இணைந்து மற்ற ஹீரோயின்கள் பொறாமைப்படும் அளவுக்கு கத்தி, தெறி மற்றும் மெர்சல் என தொடர்ச்சியாக நடித்த சமந்தா , தற்போது எங்கள் தங்கம் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார்.வந்து இறங்கியதும் விமான நிலையத்திலிருந்து நேராக தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ள விஜய்யை நேரில் சந்தித்து முன் கூட்டியே முதல் ஆளாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு , ’நான் இந்த சென்னை இறங்கியதும் மனது முழுக்க சந்தோஷமாக இருந்தது.. முதல்வர் விஜயை சந்திக்க சென்றேன். அவர் ஒரு சாதாரண சினிமா நடிகர் மட்டும் இல்லை. அவரின் எனர்ஜி, அவர் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் எல்லாமே அவர் பெரிதாக எதையே செய்யப்போகிறார் என எனக்கு தோன்றும். வலுவாக இருக்கும் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பெரிய தைரியம் வேண்டும். அதை அவர் செய்திருக்கிறார். அவர் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்,
வாழ்க்கையில் எல்லோருக்கும் அது போன்ற ஒரு தருணம் வரும். ஆனால் சிலர் மட்டுமே அதை தைரியமாக செய்து வெற்றியும் பெறுவார்கள். முதல்வர் விஜய்க்கு மன வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். இதைப் பார்த்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வாழ்க்கை மிகவும் பெரியது நீங்கள் துவங்கியுள்ள கனவை விட’ என்றும் பதிவிட்டுள்ளார் .












