Saturday, July 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

admin by admin
July 11, 2026
in Reviews
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் காதல் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதல் சிக்கல்களையும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் எதார்த்தமாகப் பேசும் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘லவ் ஓ லவ்’.

கஷ்டப்பட்டு உழைக்கும் மாதச் சம்பளம் முழுவதையும் அப்படியே தந்தையிடம் ஒப்படைக்கும் ஒரு அமைதியான இளைஞனாக வாழ்ந்து வருகிறார் நாயகன் பவிஷ். தனது சொந்தத் தேவைகளுக்குக் கூட பெற்றோரிடம் எதிர்பார்க்கும் ஒரு நல்ல பிள்ளையாக இருக்கும் அவரது வாழ்க்கையில் காதல் நுழைகிறது. அந்தப் பாசக்கார இளைஞனைக் காதல் என்ற வலை, மீள முடியாத பெரும் கடனாளியாக மாற்றுவதோடு அவரது குடும்பத்தை விட்டும் பிரிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவனது வாழ்வாதாரமாக விளங்கிய வேலையையும் பறித்து நடுத்தெருவில் நிறுத்துகிறது.

You might also like

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!

இந்நிலையில், கதாநாயகி நாக துர்காவின் எல்லையற்ற ஆடம்பர ஆசைகளாலும், எவ்விதப் பொறுப்பும் இல்லாத அவரது சுயநலக் காதலாலும் ஒட்டுமொத்தமாக உருக்குலைந்து போகிறார் பவிஷ். நிம்மதியைத் தேடி அவரிடமிருந்து நிரந்தரமாக விலக நாயகன் முடிவெடுக்கிறார். ஆனால், பவிஷ் தான் தன் வாழ்க்கைக்குப் பொருத்தமானவர் என்று பிடிவாதம் பிடிக்கும் நாக துர்கா, அவரை எப்படியாவது திருமணம் செய்தே தீர வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.

நாயகியின் இந்த ஒற்றைக்காலில் நிற்கும் பிடிவாதத்தை உடைக்க பவிஷ் ஒரு விசித்திரமான சவாலை முன்வைக்கிறார். அதன்படி, கடந்த நான்கு வருடங்களாக ஒரு காதலனாகத் தன் காதலிக்கு என்னென்ன கடமைகளைச் செய்தாரோ, அதை நாக துர்கா வெறும் நான்கு மாதங்கள் ஒரு காதலியாகப் பவிஷுக்குச் செய்து காட்ட வேண்டும். இந்த நிபந்தனையை வெற்றிகரமாக முடித்துவிட்டால் திருமணம், இல்லையென்றால் தன்னை விட்டு நிரந்தரமாக விலகிவிட வேண்டும் என்பதே அந்த உடன்படிக்கை. அதன்பிறகு என்ன நடந்தது? என்பதை நகைச்சுவையோடும் எமோஷனோடும் விவரிக்கிறது இந்த ‘லவ் ஓ லவ்’ திரைப்படம்.

முதல் படத்திலேயே ஆடல், பாடல்களில் முத்திரை பதித்த பவிஷுக்கு இது இரண்டாவது திரைப்படமாகும். இதனால் அவரது நடிப்பில் நல்லதொரு முதிர்ச்சி தென்படுகிறது. சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் நடிகர் தனுஷின் நடிப்பு சாயல் இவரிடம் எட்டிப்பார்க்கிறது. நடனம், சண்டைக்காட்சிகள், காதலியின் செயல்பாடுகளால் ஏற்படும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் இடங்கள் என அனைத்திலும் தடம் பதிக்கிறார்.

இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் நாக துர்கா, பார்ப்பதற்கு நம் வீட்டுப் பெண் போன்ற எளிய தோற்றத்தில் உள்ளார். எனினும், ரசிகர்களை உடனடியாகத் தன் பக்கம் ஈர்க்கும் வசீகரம் இவரிடம் சற்று குறைவாகவே உள்ளது. ஆடல் காட்சிகளிலும் இவருக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாததால், பார்வையாளர்களின் மனதில் அழுத்தமாகப் பதியத் தவறுகிறார்.

கதாநாயகனின் தந்தையாக வரும் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், காவல் அதிகாரியாக வரும் செல்வராகவன் மற்றும் மகளிர் அமைப்பின் தலைவியாகத் தோன்றும் வனிதா விஜயகுமார் ஆகியோரின் தேர்ந்த திரை இருப்பு, படத்தின் விறுவிறுப்பிற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

படம் முழுவதையும் வண்ணமயமாகக் காட்சிப்படுத்தி, ரசிகர்களின் கண்களுக்கு நல்லதொரு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

இசையமைப்பாளர் பாக்ஸனின் (Foxen) மெட்டுகளில் பாடல்கள் அனைத்தும் வணிக ரீதியான அம்சங்களுடன் இருந்தாலும், அவை கேட்கும் உடனே ரசிகர்களின் மனதில் பதியும் வகையிலோ அல்லது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையிலோ அமையவில்லை.

ஜெயம் ரவி – ஹன்சிகா கூட்டணியில் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன், அப்படத்தின் தாக்கத்துடனேயே இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

காதலின் ஆரம்பக் கட்டத்து இனிமைகளையும், கதாபாத்திரங்களின் மனதில் தோன்றும் அந்தப் பட்டாம்பூச்சி அசைவுகளையும் பார்வையாளர்களின் நெஞ்சில் கடத்தும் அசாத்திய மேஜிக் இதில் மிஸ் ஆகியுள்ளது.

லவ் ஓ லவ்  – சுமாரான எண்டர்டெய்னர்!

admin

admin

Related Posts

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘இதயம் முரளி’ –  விமர்சனம்!
Reviews

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

by admin
July 11, 2026
‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!
Reviews

‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!
Reviews

‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!

by admin
July 11, 2026
‘டார்க்’ – விமர்சனம்!
Reviews

‘டார்க்’ – விமர்சனம்!

by admin
July 3, 2026

Recent News

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

July 10, 2026
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

July 10, 2026
இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

July 9, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?