இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா எழுத்து மற்றும் இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள ‘தி பாரடைஸ்’ (The Paradise) திரைப்படம், அங்கீகரிக்கப்ப்டாத பழங்குடி மக்களின் பாவப்பட்ட வாழ்க்கையையும், அதிலிருந்து மீள நடத்தும் போராட்டமும் தான் ‘தி பாரடைஸ்’ படத்தின் கதை.
சவாரி எனும் ஒரு ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் கூட்டத்தில் பிறக்கும் சடையன் (நானி) என்பவனின் வாழ்க்கைப் பயணமே இத்திரைப்படத்தின் முதன்மைக் கதைக்களமாகும். சர்வ பலமிக்க ஷிகாஞ்சா மாலிக் (மோகன் பாபு) என்ற ஆதிக்கவாதி, இந்த ஒடுக்கப்பட்ட பழங்குடி இன மக்கள் அனைவரையும் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்து அடிமைகளாக, மிக கேவலமாக நடத்தி வருகிறான். ஷிகாஞ்சாவின் கொடுங்கோல் அதிகாரத்திற்குப் பயந்து அந்த பழங்குடி மக்கள் இருந்து வருகிறார்கள். இவர்களை காக்க வரும் அரசு அதிகாரிகள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இதை எதிர்த்து களமிறங்குகிறான் சடையன். அதன்பிறகு இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா, இல்லையா? என்பதே ‘தி பாரடைஸ்’ படத்தின் திரைக்கதை.

இத்திரைப்படம் கொடூர வன்முறையை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் தெறிக்கும் சண்டைகாட்சிகளில் மனித உடல் உறுப்புகள் வானத்தில் பறந்து விழுகிறது. இது அந்த மக்கள் மீது பரிதாபத்தையோ, அவர்களை அடக்கும் அதிகார சக்திகளின் மீது கோபத்தையோ வரவழைக்கவில்லை. மாறாக எரிச்சலைத்தான் வரவழைக்கிறது. படம் முடிந்தால் போதும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்து விடுகிறார்கள்.
நானி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா வை நம்பி மோசம் போயுள்ளார். நானிக்கு இந்தப்படம், அவரது கேரியரிலேயே மோசமான படமாக இருக்கிறது!
வில்லன்களாக வரும் மோகன் பாபு மற்றும் ராகவ் ஜூயல் ஆகிய இருவரும் முடிந்தவரை வில்லத்தனம் காட்டியிருக்கிறார்கள்.
கதையின் நாயகியாக வரும் கயாடு லோஹர் படத்தில் கவர்ச்சிக்காக மட்டுமே.
‘தி பாரடைஸ்’ – விவரிக்கமுடியாத கொடூர ரசனை!












