Monday, October 5, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘சிக்மா’ – விமர்சனம்!

admin by admin
October 3, 2026
in Reviews
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘லைக்கா புரடக்ஷன்ஸ்’ சார்பில், சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம், சிக்மா. இதில் நாயகனக சந்தீப் கிஷன், நாயகியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளனர். இவர்களுடன்  ராஜு சுந்தரம் ,சம்பத்ராஜ் , ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேப்பி , ஷீலா ராஜ் குமார், மகாலட்சுமி சுதர்சனன், கமலேஷ் ஜெகன் , கிரண் கொண்டா, நாகசாய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

அம்மா, ஷீலா ராஜ் குமார் நடத்திவந்த லைபிரெரியை மிகுந்த சிரமங்களுக்கிடையே நடத்தி வருகிறார், அவரது மகன் நாயகன் சந்தீப் கிஷன். உலகமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்ட நிலையில், தன்னிடம் இருக்கும் புத்தகங்களை எல்லாம் டிஜிட்டல் மூலம் உருமாற்றி தனது யூடியுப் சேனல் மூலம் பதிவேற்றுகிறார். பெரிதாக செல்லாத நிலையில், பிரபலமான ஆர் ஜே ஃபரியா அப்துல்லாவின் குரலில் ஆடியோ புக்கை உருவாக்க விரும்புகிறார். இந்த சந்திப்பு தொடர இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. யூடியுப் மூலம் போதிய பணம் வந்தாலும் அது அவரது கடனை அடைக்க போதவில்லை. அதனால், சூதாட்ட கிளப்பிற்கு சென்று விளையாடுகிறார். ங்கு திட்டமிட்டு ஏமாற்றப்படுகிறார்.

You might also like

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!

‘ஏழு கடல் ஏழுமலை’ – விமர்சனம்!

‘அன்பில் அவன்’ – விமர்சனம்!

எதேச்சையாக, சூதாட்ட கிளப்பை நடத்தி வரும் ஷிவ் பண்டிட் செய்த கொலை உள்ளிட்ட, சட்டவிரோத செயல்களுக்கான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் சந்தீப் கிஷனிடம் கிடைக்கிறது. அதை வைத்து,  ஷிவ் பண்டிட்டை பிளாக் மெயில் செய்ய முயற்சிக்கிறார். அதே பென் டிரைவ்வைத் தேடி  போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் சம்பத்ராஜ் வருகிறார். இந்த இரண்டு கும்பலும் சேர்ந்து சந்தீப் கிஷனை துரத்துகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘சிக்மா’ படத்தின் கதை.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் அதிகமாகவே நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளார். உதலில் அது சலிப்படைய வைக்கிறது. அதன் பிறகு சுவாரசியம் ஆரம்பமாகிறது. சந்தீப் கிஷன் – ஃபரியா அப்துல்லா ஆகியோருக்கிடையே நிகழும் காதல் காட்சிகளை இன்னும் சுவைபட உருவாக்கியிருக்கலாம். இவர்களத்உ ரொமேன்ஸ் காட்சிகளை விட ஆக்‌ஷன் காட்சிகளே அதிகம். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நம்பகத்தன்மை இல்லை. திரைக்கதையை இன்னும் நேர்த்தியாக வடிவமைத்திருந்தால், ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் என்டர்டெய்னர் ஆக அமைந்திருக்கும்.

சந்தீப் கிஷன் தனது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பினை கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் ரசிக்கும்படியான நடிப்பினை கொடுத்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஃபரியா அப்துல்லாவை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். அவருக்கான காட்சிகள் குறைவு. அன்புதாசன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், யோக் ஜேப்பி ஆகிய வில்லன்களில் முதலிடம் பிடிக்கிறார், யோக் ஜேப்பி. மேலும் சம்பத் ராஜ் ரசிகர்களை கவர்ந்த விதத்தில், ஷிவ் பண்டிட் ரசிகர்களை கவரவில்லை. டாக்டராகவும், சந்தீப் கிஷனின் காப்பாளராகவும் நடித்து இருக்கிறார், ராஜு சுந்தரம். கேத்தரின் தெரசா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

கிருஷ்ணன் வசந்ந்தின் ஒளிப்பதிவு பரவாயில்லை. எஸ்.தமனின் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அறிமுக இயக்குநரான ஜேசன் சஞ்சய் எடுத்துக்கொண்ட கதை, விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லருக்கு ஏற்றபடியாக இருந்தாலும், அதைத் திரைக்கதையில் கொண்டுவர முடியவில்லை. ஆனால், ஆக்‌ஷன் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் இதை ரசிப்பார்கள்.

admin

admin

Related Posts

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!
Reviews

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!

by admin
October 3, 2026
‘ஏழு கடல் ஏழுமலை’ – விமர்சனம்!
Reviews

‘ஏழு கடல் ஏழுமலை’ – விமர்சனம்!

by admin
October 3, 2026
‘அன்பில் அவன்’ – விமர்சனம்!
Reviews

‘அன்பில் அவன்’ – விமர்சனம்!

by admin
October 3, 2026
‘பத்தா’ – விமர்சனம்!
Reviews

‘பத்தா’ – விமர்சனம்!

by admin
October 3, 2026
‘டோரதி’  – விமர்சனம்!
Reviews

‘டோரதி’ – விமர்சனம்!

by admin
September 27, 2026

Recent News

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

October 4, 2026
‘மரகத நாணயம் 2’  படப்பிடிப்பு நிறைவு!

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

October 3, 2026
திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலி! கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேச்சு!!

திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலி! கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேச்சு!!

October 3, 2026
நடுக்கடலில்  ‘துரோகம் பழகு’ படக்குழுவின் வித்தியாசமான முயற்சி!

நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படக்குழுவின் வித்தியாசமான முயற்சி!

October 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?