‘ஆரண்ய காண்டம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும புதிய படம், ‘சூப்பர் டீலக்ஸ்’ . இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளராக பி.எஸ்.வினோத், நீரவ்ஷா, படத்தொகுப்பாளராக சத்யராஜ் ஆகியோருடன் படத்தை இயக்கிவருகிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், தற்போது இன்னொரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் இருக்கும் இந்தப் புகைப்பட்ம் தற்போது வைரலாகி வருகிறது.