நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சிவாஜி படத்தை போல ரஜினி சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி என்றும் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
“என் தந்தைக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது சிறப்பான செய்தி. அவரின் அரசியல் வாழ்க்கை சினிமாவை போல் இருக்காது என நம்புகிறேன். சிவாஜி படத்தை போல நல்லது செய்ததற்காக அவரை சிறையில் அடைப்பதை நான் பார்க்க விரும்பவில்லை” என நாமல் கூறியுள்ளார்.