முகவரி’, ‘நேபாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம் ‘ஏமாலி’. அறிமுக நடிகர் சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அதுல்யா ரவி, பெங்களூரை சேர்ந்த ரோஷிணி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களூடன் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சிங்கம் புலி, பாலசரவணன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.‘ஏமாலி’படம் குறித்து அதன் இயக்குனர் துரை கூறியதாவது, ‘‘இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். 4 லேயர்களாக பயணிக்கும் கதை ஒரு புள்ளியில் முடிகிற மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது என் நம்பிக்கை. நான் இதற்கு முன் இயக்கிய ‘6’ படத்திற்கு வசனங்கள் எழுதிய ஜெயமோகனையே இந்த படத்திற்கும் வசனம் எழுத வைத்துள்ளோம்’’ என்றார். இதில்சர்ச்சையான காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படும் நாயகி அதுல்யா ரவி கூறியதாவது, கொஞ்சம் கிளாமர் காட்சிகள் உள்ளது சிகிரெட் பிடிப்பது மாதியானா காட்சிகளும் உள்ளது அந்த கேரக்டருக்கு அது கண்டிப்பாக தேவை பட்டது . அதனால் தயங்காமல் நடித்தேன்.இந்தப் படத்தில் த்ரில்லர், லவ், ஈகோ என் எல்லாமே இருக்கும். அதுமாதிரி இந்த ஜெனரேஷன் ஆட்கள் செய்கின்ற தப்பு, அவங்களுக்கான மெசேஜ் என எல்லாம் இருக்கும். இந்த ஸ்க்ரிப்ட் பிடிச்சிருக்குனு வீட்டில் சொன்னவுடன் அப்பா, அம்மா மாடல் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை பண்ணுனு நம்பிக்கை கொடுத்தாங்க.
‘காதல் கண் கட்டுதே’ டைரக்டர் சிவராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர் , அவரிடம் ஸ்க்ரிப்ட் பற்றி சொன்னவுடன் ”இந்தப் படத்தில் நீ கட்டாயம் நடி”ன்னு சொன்னார். படத்தில் சிகரெட் பிடிக்கிற சீன்ஸ் வருமே என்றெல்லாம் நான் முதலில் யோசித்தேன். சிகரெட் பிடிக்கிற சீன்ஸ் வருவதற்கு ஒரு மூன்று நாளைக்கு முன்னாடி சிகரெட் எப்படி கையில் பிடிக்கணும், பத்த வைக்கணும்,சைகோத்தனமாக எப்படி சிகரெட் பிடிக்கணும் என்றெல்லாம்இயக்குனர் துரை சார் பயிற்சி கொடுத்தார். என்கிறார்.