காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் ஒரு மல்டிஸ்டாரர் படத்தை இயக்குகிறார் . இதில்,விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, பஹத் பாசில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என ஒரு நட்சத்திர பட்டாளமே திரண்டுள்ளது.இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது . இந்நிலையில், பகத்பாசில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக திடீரென விலகி விட்டதாக கூறப்படுகிறது . இந்நிலையில், பகத் பாசிலுக்கு பதிலாக புதிய நடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளது படக்குழு.