‘கபாலி’ படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘காலா’ படம் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் ‘2.ஓ’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், ‘2.ஓ’ தாமதத்தால் ‘காலா’ முன்கூட்டியே வெளியாக இருக்கிறதாம். ‘காலா’ ரிலீஸ் தேதியை இன்று மாலை 7 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்கில் அறிவித்தார் தனுஷ்.அதில் வருகிற ஏப்ரல் மாதம் 27 தேதி வெளியாவதாக அறிவித்துள்ளார்.