முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது;-‘முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன்.
கட்சியின் பெயரை பிப். 21-ல் கண்டிப்பாக அறிவிப்பேன். எனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேருவேன் இவ்வாறு அவர் கூறினார். டி.என்.சேஷன்-கமல் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் தொடங்கவுள்ள புதிய கட்சி ,பெயர் மற்றும் சின்னம் குறித்து டி.என்.சேஷனுடன் கமல் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
